நேற்றைய மதுரை மாணவர் போராட்டத்தில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் நாகராஜ்.
பெரியார் பேருந்து நிலையத்திற்கு ஒரு சவாரிக்காக வந்து இருந்தவர், மாணவர் போராட்டத்தை கண்டவுடன் தன்னையும் அந்த போராட்ட்டத்தில் இணைத்து கொண்டார். ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக கோஷங்களை கடுமையாக எழுப்பி வந்தார்.
உணர்ச்சி மேலிட அவர் கூறியது
"தம்பிகளா இத்தனை வருஷமா மனசுக்குள்ள வச்சிக்கிட்டு குமுறிகிட்டு இருந்தேன்பா..... நீங்கல்லாம் போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தாம்ப்பா நிம்மதியா இருக்கு."
"என் மகன் காலேஜுல படிக்குறான்.... போடா போய் போராடு அப்படின்னு அனுப்பிட்டேன்.."
"இனிமேல் மதுரைல போராட்டம் நடக்கும் போது போன் போடுங்க .. நேரம் கிடைக்கும் போது கலந்துக்குறேன்."
"எப்பாடு பட்டாவது ஈழ மக்களுக்கு நல்லது ஏதாவது நடக்க வைக்கணும்யா"
அவரை பார்க்கும் போது இப்படி எத்தனை பேர் உலகமெங்கும் மனம் குமுறி கலங்கி உள்ளனரோ என தோன்றியது.
அந்த ஆட்டோ ஓட்டுனரின் மொபைல் எண் : 9894038560
அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.
Source: Loyolahungerstrike
No comments:
Post a Comment
Give your support