Spread the fire

Please send protest informations, photos and updates to tnstudentsprotest(at)gmail.com

Give them your support

Chennai – R. Thirumalai - 9944224935, Dinesh - 9791162911, Karthi - 9791156568 | Tiruchy – Siva – 9940953705, Dinesh - 9080808068 | Kumbakonam - 9865370777 | Erode – Rajkumar – 8870422092, Prakash - 9976916787 | Coimbatore – Dinesh - 9944599425 | Salem – Bharathi - 9894363191 | Ramanathapuram – Abdul Kathar - 9942915913 | Dindugul – Ravi - 8220132507 | Madurai – Venkatraman - 9894438555 | Sivagangai – Sivaji Gandhi - 9865619350 | Viluppuram – A.V. Saravanan - 9443112017 | Thiruvallur – Dilipan - 9840150597 | Kanchipuram – Ansari - 9884715642, Doss - 8973061609 | Thanjavur – Gowthaman – 9786603669

Wednesday, 20 March 2013

Chennai students displayed their strength and solidarity against Sri Lanka

சென்னை தமிழர் கடற்கரையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒழுங்கு செய்த மாபெரும் மாணவர் தொடர்முழக்க போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது . ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டியும் , தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு கோரியும் , இலங்கை அரசின் மீது சர்வதேச விசாரணை கோரியும் இன்று மாணவர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுப்பட்டனர் . இந்த போராட்டதிற்கு பல்வேறு கல்லூரியில் இருந்து மாணவ மாணவியர்கள் குவித்தனர் . தொடக்கத்தில் குறைவாக இருந்த மாணவர்கள் கூட்டம் நேரம் செல்ல செல்ல பெரும் கூட்டமாக ஒன்றிணைந்தனர் . இதை பார்த்த காவல் துறையே மிரண்டனர் . பின்பு மாநிலக் கல்லூரி மாவர்கள் சாலையில் பெரும் திரளாக ஓடி வந்து காந்தி சிலை அருகே அமர்ந்து சாலை மறியல் செய்தனர் . அவர்களை காவல்துறை சமாதனப் படுத்தி கடற்கரையில் உள்ள ஒன்று கூடலுக்கு அனுப்பி வைத்தனர் . அதன் பிறகு தமிழக முதல்வரும் அந்த வழியாக வாகனத்தில் செல்லும் போது மாணவர் போராட்டத்தை ஒரு நிமிடம் நின்று பார்த்தபடி சென்றார் . மாணவர்கள் கடும் வெயிலிலும் தொடர்ந்து முழக்கமிட்ட வாறு போராட்டம் நடத்தினர் . சோர்வுற்ற மாணவர்களுக்கு மற்ற சமூக ஆர்வலர்கள் நீர் , மோர் போன்றவற்றை கொடுத்து உதவினர் . உணவு நீர் இல்லாமல் பல மாணவர்கள் சுடும் மணலில் உட்கார்ந்து போராட்டடம் நடத்தியது அவர்களின் இன உணர்வையும் ஈழ விடுதலை வேட்கையையும் காட்டியது . இம்மாணவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வண்ணம் அரசியல் கட்சி சாராத திரு பழ நெடுமாறன் அய்யா , இயக்குனர் புகழேந்தி , கௌதமன், கவிஞர் தாமரை போன்றவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர் . மாணவர் எழுச்சி சிறுதளவும் குறையாமல் இறுதி வரை இருந்தது . தமிழீழம் அமையாமல் மாணவர் நாங்கள் ஓயமாட்டோம் என்று மாணவர்கள் சூளுரைத்தனர் .








More Photos: Rajkumar Palaniswamy


Support us, Do share with your Friends.

No comments:

Post a Comment

Give your support