ஒரே நாள் திட்டமிடலில் முகநூல் வழியாக, நம் ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்காக இன்று நடைபெற்ற எங்களது ஹைதராபாத் உண்ணாவிரதப் போராட்டத்தின் எதிர்பார்க்காத சிறப்பம்சங்கள்:
1. காவல்துறை அனுமதி மறுக்கபட்ட பின்னும் திட்டமிட்டபடி காலை 9 மணிக்கு மாதாப்பூர், ஹைதராபாத்தில் போராட்டம் தொடங்கியது.
2. மதியம் 2 மணிக்கு காவல்துறை போராட்டத்தைக் களைக்க நிர்பந்திக்கவே, போராட்டம் இந்திரா பூங்காவிற்கு மாற்றப்பட்டு மாலை 5 மணிவரை தொடந்தது.
3. 60 க்கும் மேற்பட்ட தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
4. புதியதலைமுறை, GTV , போன்ற தமிழ் தொலைக்காட்சிகளோடு, டிவி 9 என்ற தெலுங்கு தொலைகாட்சி நிருபர்களும் செய்தி சேகரித்து ஒளிபரப்பினர்.
5. அப்துல்காதர் என்ற தோழர், தனது 60 வயது தாய், மனைவி, மற்றும் குழந்தைகளுடன் கலந்துகொண்டார். போராட்டம் இடமாற்றம் அடைந்தபோது, இவர்கள் கஷ்டப்படாமல் வீட்டிற்கு போகச் சொல்லியும், அதை மறுத்து போராட்டம் முடியும்வரை உண்ணாவிரதத்தில் ஆர்வமுடன் பங்கெடுத்தனர்.
6. அந்த சிறு குழந்தைகளும் உண்ணாவிரதத்தைக் கடைபிடித்தனர்.
7. கொடூரமாக கொல்லப்பட்ட இசைப் பிரியாவின் படத்தைப் பார்த்ததும், சுமார் 8 வயது நிரம்பிய தோழர் அப்துல் காதர் அவரின் குழந்தை அழுதுவிட்டது
8. 450 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து இரவு முழுதும் பயணித்து ஒரு தமிழ் நண்பர் உண்ணா விரதத்தில் கலந்து கொண்டார்.
9. புதியதலைமுறை தொலைக்காட்சி மாலை 3 மணிக்கு ஒளிபரப்பிய செய்தியை பார்த்து, 50 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து ஒரு தோழர், போராட்டம் முடியும் நேரத்தில் கலந்து கொண்டார்.
10. நமது கோரிக்கைகள் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது.
11. ஈழம் தொடர்பான கொடுமைகளை ஹிந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலத்தில் மக்களுக்கு தோழர்கள் விவரித்தனர்.
12. ஈழக் கொடுமைகளை கேட்டறிந்தபின், இரண்டு வடமாநில மற்றும் தெலுங்கு நண்பர்கள் சிறிதுநேரம் போராட்டத்தில் அமர்ந்து பங்கெடுத்தனர்.
13. ஹைதராபாத் திருக்குறள் தமிழ்ச்சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.
14. ஈழம் தொடர்பான உணர்வுப் பூர்வமான கருத்துக்களையும் அவரவருக்கு தெரிந்த ஈழ வரலாற்று நிகழ்வுகளையும் 2 மணி நேரம் மற்ற நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
15. அழுத அந்த குழந்தை கடைசியில் எங்களிடம் கேட்டது, அடுத்த போராட்டம் எப்போது என்று ?
Source: FB
போராட்டத்தில் கலந்துகொண்ட ஹைதராபாத்வாழ் தமிழர்கள் |
No comments:
Post a Comment
Give your support