விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை 40 நிமிடம் மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஜல்லிகற்களில் தரதரவென இழுத்தும், லத்தியால் அடித்தும் போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடரும் மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதிலும் இலங்கை அரசிற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டக்களத்தில் குதித்து, தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த நடவடிக்கையின் காரணமாக கடந்த 18ந்தேதி முதல் கல்லூரிகள் காலவரையரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டு அரசு உத்தரவுபிரப்பித்தது. இருப்பினும் மாணர்வகள் போராட்டம் என்பது தமிழகத்தில் ஓயாது நடந்து வருகிறது. உண்ணாவிரத போராட்டம் அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் கல்லூரி, மாணர்வர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 14–ந்தேதி முதல் 4 நாட்கள் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதில் ஏற்பட்ட பல்வேறு நெறுக்கடிகளுக்கு இனங்க, 17ந்தேதி தங்களது உண்ணாநிலை போராட்டத்தை முடித்து, வேறு வழியில் தொடர்ந்து போராடுவோம் என்று அறிவித்தபடி சென்றனர். போலீஸ் ரோந்து இதனால் விருத்தாசலம் போலீசார் மாணவர்களின் அடுத்தக்கட்ட போராட்டம் என்பது என்னவாக இருக்கும் என்கிற விசாரணைக்குள் நுழைந்தது. இந்த நிலையில் நேற்று மாணவர்கள் தரப்பில் ரெயில் மறியில் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாயின. எனவே விருத்தாசலம் ரெயில்வே சந்திப்பினை சுற்றியுலும் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, எப்படியும் போராட்டத்தை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்கிற நோக்கில் போலீசார் இருந்தனர். மாணவர்கள் ரெயில் மறியல் இந்த சூழ்நிலையில் காலை 11.45 மணி அளவில் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் விருத்தாசலம் ரெயில்வே சந்திப்பிற்கு உள்ளே வந்தது. அப்போது யாருமே எதிர்பாராத வகையில் அதே ரெயிலில் இருந்தும், பிளாட்பாரத்தில் ஆங்காங்கே இருந்தும், மற்றும் அருகே உள்ள முட்புதர்கள் என சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து என நாலாபுறத்தில் இருந்தும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக ஓடி வந்து ரெயிலின் முன்பு அமர்ந்து மறியிலில் ஈடுபட்டனர். இலங்கைக்கு எதிராக மறியல் இதனை சற்றே எதிர்பாரத போலீசார் எங்கிருந்து இத்தனைபேர் வந்தார்கள் என்று ஒரு நிமிடம் செய்வதறியாது திகைத்து போய் நின்றதுடன், எந்த திசையில் இருந்து வரும் மாணவர்களை தடுத்து நிறுத்துவது என்பதே தெரியாமல் குழப்பத்திற்கள் ஆளானார்கள். இவ்வாறு போலீசரை ஏமாற்றி, ரெயில்நிலையத்திற்குள் நுழைந்த மாணவர்கள் ரெயில் மறியிலில், தண்டவாளத்தில் படுத்திருந்தும், ரெயில் என்ஜீன் மீது ஏறியபடியும் அனைவரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, மற்றும் மத்திய அரசு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். மனம் தளராத போலீஸ் இதன் பின்னர் சிறிது நேரம் கடந்த உடன், மாணவர்களை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அங்கிருந்த போலீசார் கேட்டுக்கொண்டனர். இருப்பினும் மாணவர்கள் யாரும் போராட்டத்தினை கைவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இல்லாமல் உணர்ச்சியுடன் தொடர்ந்து போராட்டத்திலேயே ஈடுபட்டனர். இதனால் மாணவர்களை கலைந்து செல்ல செய்ய ஒரு கட்டத்தில், மெதுவாக ரெயில் என்ஜீன் நகர்த்தப்பட்டது, இருப்பினும் மனம் தளராத மாணவர்கள் அனைவரும் தண்டவாளத்திலேயே தலைவைத்து படுத்திருந்தும், இன்ஜினுக்க அடியில் தலைவைத்தும் போராட்டத்டதில் ஈடுப்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடன் ரெயில் டிரைவர் என்ஜீனை அணைத்து விட்டார். மாணவர்களை விரட்டி அடித்த போலீஸ் மாணவர்களை அப்புறப்படுத்திட என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற போலீசார் அங்கு சுற்றியிருந்தவர்களையெல்லாம் விரட்டி அடித்தனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் குண்டுகட்டாக துக்கி செல்ல முற்பட்டனர். அப்போதும், மாணர்வர்கள் ஒருவருக்கொருவர் சங்கிலி போல் பின்னிபிணைந்து கொண்டதால், அந்த முயற்சியிலும் போலீசார் தோல்வி அடைந்தனர். தரதரவென இழுத்த போலீசார் பின் ஒன்று சேர்ந்த போலீஸ் மாணவர்களின் கால், கைகளை பிடித்து தண்டவாளத்தில் கிடந்த ஜல்லி கற்களில் தரதரவென இழுத்து சென்று அப்புறப்படுத்தினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நேர்ந்தது. இவ்வாறு இழுத்து சென்ற போது, மாணவர்களுக்கு கால் கைகளில் காயம் ஏற்பட்டது. மேலும் ரெயில் என்ஜினில் ஏறிநின்ற மாணவர்களை லத்தியால் அடித்தும் அப்புறப்படுத்தினார்கள். போலீசாரின் இந்த நடவடிக்கையினை கண்டித்து மாணவர்கள் அனைவரும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இவ்வாறு போலீசார் அனைவரையும் இழுத்து, லத்தியால் அடித்தும் மாணவர்களை ரெயில் தண்டவாளத்தில் இருந்து சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு அப்புறப்படுத்தி, போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தனர். 66 பேர் கைது இதன் தொடர்ச்சியாக, ரெயில்நிலைய பிளாட்பாரத்தில் நின்றபடி மாணவர் கூட்டமைப்பினர், மாணவர்களை ஓடுக்கியதாக கூறி போலீசாருக்கு எதிராகவும், தமிழர்கள் அனைவரும் ஒன்று பட வேண்டும். இலங்கை மீது பொருளாதார தடைவிதித்துடுதல், ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வலுவான தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். மணவர்களின் இந்த திடீர் போராட்டத்தின் காரணமாக சுமார் 45 நிமிடம் காலதாமதாமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 78 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
-Pravin Raj
Spread the fire
Please send protest informations, photos and updates to tnstudentsprotest(at)gmail.com
Give them your support
Chennai – R. Thirumalai - 9944224935, Dinesh - 9791162911, Karthi - 9791156568 | Tiruchy – Siva – 9940953705, Dinesh - 9080808068 | Kumbakonam - 9865370777 | Erode – Rajkumar – 8870422092, Prakash - 9976916787 | Coimbatore – Dinesh - 9944599425 | Salem – Bharathi - 9894363191 | Ramanathapuram – Abdul Kathar - 9942915913 | Dindugul – Ravi - 8220132507 | Madurai – Venkatraman - 9894438555 | Sivagangai – Sivaji Gandhi - 9865619350 | Viluppuram – A.V. Saravanan - 9443112017 | Thiruvallur – Dilipan - 9840150597 | Kanchipuram – Ansari - 9884715642, Doss - 8973061609 | Thanjavur – Gowthaman – 9786603669
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Give your support