இன்று காலை 9 - 11 மணிவரை சான் பிரான்சிஸ்கோ நகரத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் முன் வளைகுடாப் பகுதித் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் தமிழ்ச் சகோதர, சகோதரிகள் வந்து இப்போராட்டத்தை ஆதரித்து முழக்கம் செய்தது நம்பிக்கையை ஊட்டியது. குறைந்த நாட்களில் (ஞாயிறன்றுதான் இந்த ஆர்ப்பாட்ட நடத்த கதைக்கத் துவங்கினோம்) 40-45 தமிழர்கள் அதுவும் வாரநாளில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தது மனதை நெகிழ்வித்தது. “We support TN Students", "INDIA-SUPPORT HUMAN RIGHTS, INDIA-SAVE TAMILS, INDIA-DONT DILUTE US RESOLUTIONS" போன்ற முழக்கங்கள் தூதரக அதிகாரிகளின் காதில் விழுந்திருக்கும். துணைத் தூதர் ஒருவரைச் சந்தித்து உலகத் தமிழ் அமைப்பின் சார்பில் கடிதமொன்றை அளித்தோம். காவல்துறையினரின் ஒத்துழைப்புடனும், பாதுகாப்புடனும் நன்கே இந்த ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
குறைந்த கால அவகாசத்தில் வந்த வளைகுடாப்பகுதித் தமிழர்களுக்கு நன்றி செல்ல வார்த்தை இல்லை. அடுத்தப் போராட்டம் வெகுவலிமையாக நடைபெறும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
தமிழக மாணவர்கள் வெல்வார்கள்! அவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்! நிச்சயம் வெல்வோம், நாளை தமிழீழம் காண்போம் !!

Source: க. தில்லைக்குமரன்
No comments:
Post a Comment
Give your support