தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் விருதாச்சலத்தில் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
சிங்களருடன் சேர்ந்து தமிழர்கள் இணக்கமாக வாழவேண்டும் என எந்த இந்திய அரசியல்வாதியாவது கூறினால் செருப்பாலே அடிப்போம் . பொதுக்கூட்டத்தில் மாணவர்கள் ப்ரொஜெக்டர் மூலம் பெரிய திரையில் ஈழ இனப்படுகொலையை திரையிட்டு காட்டி இனி இந்த ப்ரொஜெக்டரை விலைக்கு வாங்கி ஒவ்வொரு கிராமமாக சென்று திரையிட்டு காட்டி மக்களுக்கு உண்மையை உணர்த்துவோம் என்றும் அறிவித்துள்ளர்கள், மேலும் பொதுகூட்டத்தை பார்த்தும் பார்க்காத மாதிரி சென்றவர்கள் கையில் உப்பை கொடுத்து சோற்றில் போட்டு சாப்பிடுங்கள் அப்படியாவது சூடு, சொரணை வரட்டும் என முகத்தில் அடித்தாற்போல் ஆவேசமாக மாணவர்கள் கூறினார்கள். மாணவர்களின் தூய்மையான தன்னலமற்ற போராட்டத்தை எந்த அமைப்புகளோ, கட்சிகளோ தங்களுக்கு சாதகமாக பயன்படித்தினால் அது சாப்பிட்டுவிட்டு தெருவில் வீசும் எச்சிலையை எடுத்து நக்குவதற்க்கு சமம் என உணர்ச்சியுடன் பேசினார்கள் மாணவர்கள். தமிழர்களின் ஒரே தீர்வான தமிழீழத்தை அடையும் வரை நாங்கள் எந்த வகையிலும் சமாதானமாக மாட்டோம், தமிழ் எங்கள் குருதி, ஈழம் அது உறுதி என மாணவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
தொடர்பிற்கு
மாறன் : 99522 24112
பிரவின் : 95000 78349
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Post a Comment
Give your support