Spread the fire

Please send protest informations, photos and updates to tnstudentsprotest(at)gmail.com

Give them your support

Chennai – R. Thirumalai - 9944224935, Dinesh - 9791162911, Karthi - 9791156568 | Tiruchy – Siva – 9940953705, Dinesh - 9080808068 | Kumbakonam - 9865370777 | Erode – Rajkumar – 8870422092, Prakash - 9976916787 | Coimbatore – Dinesh - 9944599425 | Salem – Bharathi - 9894363191 | Ramanathapuram – Abdul Kathar - 9942915913 | Dindugul – Ravi - 8220132507 | Madurai – Venkatraman - 9894438555 | Sivagangai – Sivaji Gandhi - 9865619350 | Viluppuram – A.V. Saravanan - 9443112017 | Thiruvallur – Dilipan - 9840150597 | Kanchipuram – Ansari - 9884715642, Doss - 8973061609 | Thanjavur – Gowthaman – 9786603669

Sunday, 7 April 2013

இலங்கை பொருட்களை புறக்கணிப்போம். சென்னையில் கையெழுத்துப் பரப்புரை

இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்ற பரப்புரை தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் இன்று மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது . தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பிஸ்கட் , இனிப்புகள் , பழங்கள் , இறைச்சி , பருத்தி ஆயத்த ஆடைகள் முதலிய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது . குறிப்பாக இந்திய அரசு இலங்கைக்கு வரிச் சலுகை அளித்த பின்பு , இலங்கையில் இருந்து நிறைய பொருட்கள் தமிழக சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளது . இதனால் இலங்கை பொருளாதாரம் பலம்பெரும் வாய்ப்பு உள்ளது . இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் பலம்பெற்றால் , இலங்கை அரசு மென்மேலும் ஆயுதம் வாங்கிக் குவிக்க அந்த பணத்தை செலவிடும் . மேலும் இலங்கை ராணுவத்திற்கு இந்த பணம் பயன்படும். ஏற்கனவே தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் நிரந்தர முகாமிட்டு தமிழர்களுக்கு கொடும் துன்பம் இழைக்கிறது. இந்த நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பெருகினால் அது இலங்கைக்கு நன்மையை பயக்குமே அன்றி தமிழர்களுக்கு நன்மை பயக்காது . அதனால் இலங்கையின் ஏற்றுமதி சந்தையை முடக்குவது தான் இலங்கையின் மீதான பொருளாதாரத் தடையை வலுப்படுத்தும் என்ற அடிப்படையில் , இலங்கையின் உற்பத்தி பொருட்களை தமிழக தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் என்ற பரப்புரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் ஈடுபட்டது . ஏற்கனவே இதுபோன்ற பல பரப்புரையில் நாம் ஈடுபட்டிருந்தாலும் , இம்முறை தமிழக மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்க முடிந்தது .


இலங்கையில் இருந்து தயாரித்து வரும் சில திண்பண்டங்களை நாம் கையில் எடுத்துக் கொண்டு போய் மக்களிடம் காட்டினோம் . அதை அவர்கள் வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தினோம் , மேலும் 'இலங்கை தயாரிப்பு' என்ற எந்த பொருட்களில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை தமிழர்கள் வாங்கக் கூடாது என்ற பரப்புரை செய்தோம் . தமிழர்களுக்கு மட்டும் இந்த செய்தி சேரவில்லை . இந்தியாவில் இருந்து வந்த பிற மாநில மக்களுக்கும் இந்த செய்தியை கொண்டு சேர்த்தோம் . பிற மாநிலத்தவர்களும் இனப் படுகொலை செய்த இலங்கையை புறக்கணிப்பதாக உறுதி அளித்தனர். இலங்கை சேவைகள் மற்றும் பொருட்களை புறக்கணிப்போம் என்று அவர்கள் கையெழுத்து மூலம் நமக்கு உறுதி அளித்தனர் . ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது குறித்த தகவல் அடங்கிய துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் கையெழுத்து பரப்புரைக்கு ஆதரவு அளித்தனர் . காவல்துறையும் நமக்கு பெரும் பிரச்சனையாக இல்லை . மொத்தத்தில் இந்த இலங்கைக்கு எதிரான பரப்புரை பெரும் வெற்றி பெற்றது . இந்த பரப்புரையில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகள் .


மேலும் படங்கள் இங்கே - Rajkumar Palaniswamy
Support us, Do share with your Friends.

No comments:

Post a Comment

Give your support