சென்னை முஹம்மது சதக் ஏஜே காலேஜ் ஆப் இஞ்சினீரிங்கில் மாணவர்கள் இரண்டு நிமிட மௌனப்போராட்டம் தினசரி அனுசரிக்கப்படுகிறது.
அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இந்த மௌனப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும். சதிஸ் 9092069617
Demanding justice on structural genocide
இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்ற பரப்புரை தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் இன்று மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது . தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பிஸ்கட் , இனிப்புகள் , பழங்கள் , இறைச்சி , பருத்தி ஆயத்த ஆடைகள் முதலிய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது . குறிப்பாக இந்திய அரசு இலங்கைக்கு வரிச் சலுகை அளித்த பின்பு , இலங்கையில் இருந்து நிறைய பொருட்கள் தமிழக சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளது . இதனால் இலங்கை பொருளாதாரம் பலம்பெரும் வாய்ப்பு உள்ளது . இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் பலம்பெற்றால் , இலங்கை அரசு மென்மேலும் ஆயுதம் வாங்கிக் குவிக்க அந்த பணத்தை செலவிடும் . மேலும் இலங்கை ராணுவத்திற்கு இந்த பணம் பயன்படும். ஏற்கனவே தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் நிரந்தர முகாமிட்டு தமிழர்களுக்கு கொடும் துன்பம் இழைக்கிறது. இந்த நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பெருகினால் அது இலங்கைக்கு நன்மையை பயக்குமே அன்றி தமிழர்களுக்கு நன்மை பயக்காது . அதனால் இலங்கையின் ஏற்றுமதி சந்தையை முடக்குவது தான் இலங்கையின் மீதான பொருளாதாரத் தடையை வலுப்படுத்தும் என்ற அடிப்படையில் , இலங்கையின் உற்பத்தி பொருட்களை தமிழக தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் என்ற பரப்புரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் ஈடுபட்டது . ஏற்கனவே இதுபோன்ற பல பரப்புரையில் நாம் ஈடுபட்டிருந்தாலும் , இம்முறை தமிழக மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்க முடிந்தது .